
கரூர் தமிழக வெற்றி கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.
தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த வெள்ளகோவில் நகர கழக உறுப்பினர் கோகுல பிரியா மற்றும் வெள்ளகோவில் நகர நான்காவது வார்டு தொண்டரணி அமைப்பாளர் மணிகண்டன் இருவரும் கரூர் தமிழக வெற்றி கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தார்கள், இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் தங்களது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பல்லடம் யுவராஜ் மகேஷ் அவர்கள் முன்னிலையில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளகோவில் பேருந்து நிலையம் முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது, வெள்ளகோவில் நகரச் செயலாளர் திரு சுரேஷ் மற்றும் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அவர்கள் அவர்கள் இரங்கல் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்தார், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்






