
கல்லூரி மாணவர்களுக்கு வெற்றிப்பாதை நிகழ்ச்சி...
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை ம. தி. தா. இந்துக்கல்லூரியில் பொருளியல் பயிலும் மாணவர்களுக்கான வெற்றிப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
இளைஞர் நலன் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ஆங்கிலத்துறை துறை தலைவர் மற்றும் இளைஞர் நலன் துறை பேராசிரியர் முனைவர் ஜான்சன் விக்டர் பாபு வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் பொருளியல் துறை த்தலைவர் முனைவர் சீதாராமன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும் காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியருமான திரு.பொன்னுசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






