
சிறப்பாக தொடங்கிய சிறப்பு முகாம்...
நெல்லை பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட தொடக்க விழா பேட்டை நரிக்குறவர் காலனியில் இன்று தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நல்லாசிரியர் பொன்னுசாமி என் எஸ் எஸ் திட்ட அலுவலர் செந்தில் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






