
நாட்டரசன் கோட்டை - அருள்மிகு கன்னுடைய நாயகி அம்மன் திருக்கோவில் மஞ்சள் காப்பு வைபவம்.
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகுராணி சாகிபா கௌரி வல்லப ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத D.S.K மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டரசன் கோட்டை அருள்மிகு கன்னுடைய நாயகி அம்மன் கோவிலில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு மஞ்சள் காப்பு அரைத்து சாத்தும் வைபவம் 21/09/2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் பிரதி மாதம் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாத்தினால் காரிய ஜெயம், தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்குதல், ஏவல்& பில்லி சூனியம் விலகுதல், மற்றும் பக்தர்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறுவதாக ஐதீகம்.
அம்மாவாசை தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்து அம்மனின் அருள் பெற வேண்டுகிறோம்.
குறிப்பு: பக்தர்கள் அம்மனுக்கு சாத்திய மஞ்சள் மறுநாள் வந்து திருக்கோயிலில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருவிழா சிறப்பாக நடைபெற்றது பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.






