March 2, 2026
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

மதுரை:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தில் இன்று(23.09.2025) அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன், மதுரை மாவட்டம், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரிமேடு பகுதியில் மேம்பாட்டு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் உடன் உள்ளனர்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் இன்று(23.09.2025) ஊமச்சிகுளம் சந்திப்பில் தூய்மை இயக்கம் 2.0 திட்டம் சார்பில் மாபெரும் கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ் மாபெரும் தூய்மை செய்யும் பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், செட்டிகுளம் ஊராட்சி, ஊமச்சிகுளம் முதல் கடச்சனேந்தல் வரை சுமார் 2.5 கி. மீ நீளத்திற்கு தூய்மை செய்யும் பணியில் 400க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாவட்டம், வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள அங்கையற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *