
ஸ்ரீபெரும்புதூர்- ஜமீன் தண்டலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
ஸ்ரீபெரும்புதூர் செப்டம்பர் 20
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஜமீன் தண்டலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்தார், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு செல்வப் பெருந்தகை,காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், துணைத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்,
இம்முகாமில் பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலன் எலும்பியல், நரம்பியல், தோல், மகப்பேறு, கண் காது மூக்கு தொண்டை, இயன்முறை ,பல், நுரையீரல், மனநலம், நீரிழிவு, கதிரியக்கம் உள்ளிட்ட சேவைகள் இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது
இதற்கு முன்பு பருவமழை காலங்களில் மட்டும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் ஆனால் இப்போது நான் கரை ஆண்டுகளில் பருவ மழைக்கு முன்பாகவே ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 8 ஆயிரம் முகாம்கள் நடைபெற்றுள்ளன, நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் ஆகஸ்ட் 2 சென்னையில் துவங்கப்பட்டது எனவும் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், நடப்போம் நலம் காப்போம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு திட்டம், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உள்ளிட்டவைகள் இன்று பயன்பாட்டில் உள்ளதாக கூறினார்.,
மாதந்தோறும் சனிக்கிழமைகளில் 38 வருவாய் மாவட்டங்கள், 388 ஒன்றியம், சென்னை மாநகராட்சியில் 15 இடங்கள், 10 லட்சத்துக்கு மேற்பட்ட ஐந்து மாநகராட்சிகளில் தலா நான்கு என்ற வகையில், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா மூன்று என்ற வகையில் இன்று வரை மாநிலம் முழுவதும் 37 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், இம்மருத்துவ முகாம் மூலம் கடந்த வாரம் 75460-நபர்கள் பயன் பெற்றுள்ளதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 6 முகாம்களில் இதுவரை 7588-நபர்கள் பயன் பெற்றுள்ளதாகவும், ஜமீன் தண்டலத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 7-வது முகாம் எனவும் கூறினார்,






