
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கிட் பேக் பரிசு :
வாடிப்பட்டி, செப்.18-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும், வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு கிட் பேக் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, மண்டல் தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டாக்டர் சிவகுமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி, முன்னாள் மண்டல் தலைவர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு பிரிவு செயலாளர் அருண்குமார் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஓ.பி.சி. அணி முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி தாய்மார்களிடம் கிட் பாக்ஸ் பரிசுகள் வழங்கினார். இதில், செவிலியர்கள் கவிதா பேபி மற்றும் நிர்வாகிகள் சேதுராமன்,விஜயகுமார், தர்மராஜன், கோபால்,சந்தனகுமார், அழகர்சாமி,வேலு செழியன், குணா, கேசவன்,சோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், இந்து முன்னணி நிர்வாகி குணசேகரன் நன்றி கூறினார்.






