
மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து.
வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யோகா,முகேஸ்வரி. சோபிகா, லவனா ஆகியோர் முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டிக்கு விளையாட மதுரை மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன்,பாண்டியம்மாள், வனிதா ஆகியோரை தலைமை ஆசிரியர் திலகவதி,உதவி தலைமை ஆசிரியர் பிரேமா மற்றும் ஆசியர்கள பாராட்டினர். மேலும், இந்த மாணவிகளுக்கு சோழவந்தான் சட்டமன்ற மன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார்.






