March 5, 2026
எஸ் எஸ் ராமசாமி படையாட்சியாரின் 108 வது பிறந்தநாள் விழா

எஸ் எஸ் ராமசாமி படையாட்சியாரின் 108 வது பிறந்தநாள் விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் வன்னியர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பாக வன்னியர் சமுதாயத்தின் பெருந்தலைவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.ராமசாமி படையாட்சி அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவானது திண்டுக்கல்லில் 98 கிராமங்களில் உள்ள வன்னியர் சொந்தங்களை இணைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் 98 கிராமங்களில் இருந்தும் ஊர் பெரியவர்கள் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எஸ் எஸ் ராமசாமி படையாட்சி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் இந்நிகழ்ச்சியை வன்னியர் உறவின்முறை கூட்டமைப்பு சார்பாகவும் P.லெட்சுமணன், ஹீதர், கண்ணன் வழக்கறிஞர், தமிழ் செல்வம், கமலவிக்னேஷ், செந்தில் வேலு , RV செல்வா, பால்பாண்டி, லோகேஸ், செந்தில் பால்ராஜ் ஆகியோர் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *