April 17, 2026
வாடிப்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா ! வெங்கடேசன் எம் எல் ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் :

வாடிப்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா ! வெங்கடேசன் எம் எல் ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் :

வாடிப்பட்டி, செப்.16 –
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலை யத்தில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொ ண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன்,பேரூர் செயலாளர்கள் மு.பால் பாண்டியன், ரகுபதி,ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன் மாறன், தன்ராஜ், சிறைச்செல்வன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சேகர், முன்னாள் மாவட்ட துணை தலைவர் அயூப்கான், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், வெற்றிச்செல்வன், பங்களா சி.மூர்த்தி, ராம் மோகன், பிரபு, அரவிந்த்,முரளி, ராஜசேகர்,வினோத் உட்பட கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *