
ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான "கபடி" போட்டி !
திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி காங்கேயம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக காங்கேயம் கத்தாங்கண்ணியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட கபாடி வீரர்கள் பங்கு பெற்றார்கள், இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பல்லடம் யுவராஜ் அவர்கள் கலந்து கொண்டு கத்தாங்கண்ணி ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு பரிசாக ரூபாய் 30000 ரொக்கமாக வழங்கப்பட்டது.
இவ்விழாவினை காங்கேயம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார், மேலும் 100 க்கும் மேற்பட்ட த.வெ.கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் பொதுமக்கள் தங்களது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.






