
ஸ்ரீபெரும்புதூர்- பென்னலூர் "பேரறிஞர் அண்ணா" அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா !
ஸ்ரீபெரும்புதூர் செப்டம்பர் 15
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள பென்னலூர் ஊராட்சியில் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கழகத்தோழர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்,.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை தலைக் குனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ம.கல்யாணி, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோ.சி.பாபு,ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரீட்டா, ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் கோகுல கண்ணன், கிளைக் கழகச் செயலாளர் சே.ரமேஷ், இளைஞர் அணியினர் : ஓ.முத்து,செ.முரளி, ச.செல்வகுமார், ஆ.லட்சுமி காந்தன், வீ.செல்வமணி, மகளிர் அணியினர் : அ.கனகவல்லி, செ.மல்லிகா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.






