
தமிழே !..
நிலவுக்கு தானது எத்தனை பெயரோ?.
நீள் புலிக்கும் தானிங்கு எத்தனை பெயரோ?..
வானுக்கும் தானிங்கு எத்தனை பெயரோ?
வகை வகையாக வைத்தது தமிழர்க்கு அறிவே!..
பூமியை பார்த்ததும் பார் என்றாரே
புரளும் அதுவும் பூத்தது என்றாரே
நிலவை பார்த்ததும் நிலம் என்றாரே
நிற்பதும் வளர்வதும் சந்தியில் தானே?..
வானத்தை பார்த்ததும் விரிசடை போலே
வளர்ந்து வளர்ந்து நகர்வது போலே
வடிவங்கள் மாறி போவது போலே
கண்டது போக கழிந்தது போக
கடலாய் நீரும் பரந்தது போல
இருள்உள் இருந்து ஓளிவது போலே
இருக்கும் நிலையில் ஓளிர் வதனாலே..
எல்லாம் எல்லாம் காரணத் தோடே..
இட்டார் பெரியோர் அறிந் ததினாலே
வைத்தார் பெயர்களை கோள்களை பார்த்தே..
வையகம் நடக்க நாளென உரைத்தே!.
படைத்தார் கிழமைகள் மா திங்களாக
கிழக்கும் மேற்கும் வரவுகள் போக
இடமென வைத்து வலமென உலாவ..
எப்படி எப்படி காலங்கள் ஆக
ஆண்டு முடித்து வருடங்கள் ஓட
அதனை அடுக்கி யுகம் யுகமாக்க..
அறிந்தார் முன்னோர் அறிவியலாக
அதனை வைத்து பஞ்சாங்கம் போட
வானும் காற்றும் நீரும் ஒன்றென கலக்க
வதங்கி இருக்கும் தீ வந்து எரிக்க
நிலம் போல் பலவும் நீந்தி கடக்க
நிற்பது தானே மோதலில் மினுக்க..
நாமத்தை மறந்தோம் உயர்வென உரைக்க..
நலங்கள் ஆமோ பிறர் சொல்ல விடுக்க?..
அறிக!.. அறிக.. அதுதான் அறிவாம்
அறிவியல் என்பது அதனின் தொடர்பாம்
புரிக .. புரிக.. புதிதென வளர்வாய்
புதிய தலைமுறைகள் கண்டெழத் தெளிவாய்!
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி






