March 2, 2026
கோயில்களில், தேய்பிறை அஷ்டமி: கால பைரவர் பூஜை :

கோயில்களில், தேய்பிறை அஷ்டமி: கால பைரவர் பூஜை :

மதுரை:

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை, முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக, கால பைரவருக்கு, பக்தர்களால், மஞ்சள்பொடி, திரவியம் பொடி, பால், தேன், சந்தனம் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, கால பைரவர் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டு, அர்ச்சணைகள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை சௌபாக்ய விநாயகர் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மதுரை வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்திலும், வைகை காலனி கிழக்குப் புறத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் ஆலயம் வர சித்தி விநாயகர், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயத்திலும், தேய்பிறை அஷ்டமி விழா, அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை தெப்பக்குளம் கால பைரவர் ஆலயத்தில், கால பைரவருக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *