
பழனி தாலுக்கா, ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட (குறிஞ்சிநகர்) புதியவார்டு எண்.8பொது மக்கள் கோரிக்கை !
திண்டுக்கல் மாவட்டம் –
இப்பவும் இப்பகுதியின் இரண்டு சாலையிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக தார்சாலைகளை பெயர்த்து, அதனுடன் புதிதாக 3/4″ குவாரி கழிவு கற்களுடன், குவாரி டஸ்ட்டையும் கலந்து கொட்டி, பதிவு எண் இல்லாத ரோடு ரோலர் மூலம் அழுத்தம் செய்து சுமார் ஒரு மாதமாகியும் தார் கலவை இட்டு சாலை பணி முடிக்கவில்லை.
இந்த சாலைகளில் 6,4,2-சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகமுள்ளதால், வீடுகளுக்குள் குவாரிடஸ்ட் பறந்து புகுந்து, சிறிய கற்கள் தெரித்து வீட்டுக்குள் வந்து விழுவதும் வாடிக்கையாக உள்ளது.
குவாரி டஸ்ட் காரணமாக குடியிருப்போருக்கு சுவாச கோளாறு, அலர்ச்சி, ஒவ்வாமை அதன்காரணமான உடல் உபாதைகள் ஏற்பட்டு மிக சிரமத்தை தாங்கி குடியிருக்க வேண்டிய அவல நிலையில் வாழ்க்கை நடத்துகிறோம்.
எனவே இந்த நிலையிலிருந்த இப்பகுதி மக்களின் சுமூக வாழ்க்கைக்கும், மூத்தகுடி மக்களின் மன அமைதிக்கும் ஆதரவு தர அரசு நிர்வாகத்தை பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.பகுதி குடியிருப்போர் சார்பாக :
கை.லோகநாதன்






