March 2, 2026
UPI Transaction Limit: யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு உயர்வு..! எவ்வளவு தெரியுமா? டோட்டலாக மாறிய ரூல்ஸ் !

UPI Transaction Limit: யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு உயர்வு..! எவ்வளவு தெரியுமா? டோட்டலாக மாறிய ரூல்ஸ் !

Unified Payments Interface (UPI) என்று அழைக்கப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பிறருக்கு பணம் அனுப்பவும், பணம் பெறவும் UPI பெரிதும் உதவியாக இருக்கிறது. GPay, PhonePe, Paytm உள்ளிட்ட ஆப்ஸ்கள் UPI பண பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ளன. இதேபோல் ஏராளமான வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் UPI பண பரிவர்த்தனை ஆப்ஸ்களை கொண்டுள்ளன.

யுபிஐ‍ பணபரிவர்த்தனை
இந்நிலையில், யுபிஐ-யில் (UPI) செப்டம்பர் 15, 2025 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதாவது செப்டம்பர் 15 முதல் வணிகர் பிரிவுகளுக்கு UPI வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரையிலான P2M பரிவர்த்தனைகளைச் செய்யலாம். காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீடுகள், அரசு இ-சந்தையில் (Government e-Marketplace) செய்யப்படும் வரி மற்றும் இதர கட்டணங்கள், பயணக் கட்டணங்கள் போன்ற குறிப்பிட்ட வணிகர் பரிவர்த்தனைகளுக்கு (Person-to-Merchant – P2M) ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்

ஆர்பிஐ புதிய விதி
இந்தியாவில் மொபைல் சந்தை மிகவும் பரந்தது. TRAI தரவின்படி, நாட்டில் 116 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் உள்ளன. இத்தகைய சூழலில், ஆர்பிஐயின் இந்த முன்முயற்சி செயல்படுத்தப்பட்டால், வங்கிகள் பாதுகாப்பாக இருப்பது, வாடிக்கையாளர்கள் தவணைத் தொகையை நேரத்தில் செலுத்த வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கும்.

மொபைல் தவணை கடன்
ஏற்கனவே சில நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர் தவணை செலுத்தவில்லை என்றால், போனில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு ஆப்பின் மூலம், அந்த சாதனத்தை லாக் செய்யும் முறையை பயன்படுத்தி வந்தன. ஆனால், கடந்த ஆண்டு ஆர்பிஐ இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இப்போது புதிய விதிமுறைகளுடன் இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது.

போன் லாக் விதி
இந்தியாவில் இன்று பெரும்பாலான மொபைல் போன்கள், சிறிய தனிநபர் கடன்கள் அல்லது தவணை முறையில் வாங்கப்படுகின்றன. 2024-ல் வெளியான ஹோம் கிரெடிட் பைனான்ஸ் ஆய்வின் படி, மின்னணு சாதனங்களில் மூன்றில் ஒரு பங்கு பொருட்கள் தவணை முறையில் வாங்கப்படுகின்றன. இதனால் வங்கிகளுக்கு சிறிய அளவிலான கடன் சுமைகள் அதிகரித்து வருகின்றன.

வங்கி வழிகாட்டுதல்
இதனை சமாளிக்க, ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI) ஒரு புதிய நடவடிக்கையை பரிசீலித்தது. அதாவது, தவணையில் மொபைல் போன் வாங்கியவர் பணம் செலுத்தாமல் விட்டால், வங்கி அந்த போனை தூரத்தில் இருந்து தானாகவே லாக் செய்யும் அதிகாரத்தைப் பெறலாம். இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை வங்கிகளின் மோசமான கடன் (NPA) சுமையை குறைப்பதற்காக செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில், வருமான வரிச் சட்டத்தின் கீழ், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தங்க நகைகளை வீட்டில் வைத்திருப்பதற்கு குறிப்பிட்ட வரம்புகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் பாலினம் மற்றும் திருமண நிலையை அடிப்படையாகக் கொண்டவை:

திருமணமான பெண்: 500 கிராம் வரை தங்க நகைகளை எந்த ஆவணமும் இல்லாமல் வைத்திருக்கலாம். இது சுமார் 62.5 சவரன் ஆகும்.

திருமணமாகாத பெண்: 250 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்கலாம்.

ஆண்கள் (திருமணமானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள்): 100 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்கலாம்.

சட்டம் சொல்வது என்ன?
வரம்புக்குள் இருக்கும் தங்கம்: மேற்கூறிய அளவுகளுக்குள் தங்கம் வைத்திருந்தால், வருமான வரித்துறை சோதனையின் போது அவை பறிமுதல் செய்யப்படாது. இந்த வரம்புகள் 1994-ல் CBDT வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் அமைந்தவை, இது திருமணம் மற்றும் பரம்பரை நகைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது.

ஆவணங்கள் தேவை: வரம்பை மீறி தங்கம் வைத்திருந்தால், அதன் மூலத்தை நிரூபிக்க ஆவணங்கள் (வாங்கிய ரசீதுகள், பரம்பரை ஆவணங்கள், அல்லது வரி விலக்கு பெற்ற வருமானத்தில் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்கள்) தேவை.

வரி விதிமுறைகள்: தங்கத்தை வைத்திருப்பதற்கு வரி இல்லை, ஆனால் அதை விற்கும்போது வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்து விற்றால், 20% நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG) மற்றும் 4% செஸ் விதிக்கப்படும்.

தனிநபர் பரிவர்த்தனையில் மாற்றமில்லை
மேலே குறிப்பிட்ட வகைகளில் ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனையின் வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் கிரெடிட் கார்டு பில்கள், நகை வாங்குதல், கடன் மற்றும் இஎம்ஐ போன்ற சில பரிவர்த்தனைகளுக்கும் வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதே வேளையில் சாதாரண பரிவர்த்தனைகளுக்கு மாற்றம் இல்லை. தனிநபர் பரிவர்த்தனைகளுக்கான (Person-to-Person – P2P) ஒரு நாள் வரம்பு ரூ. 1 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *