
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு :
மதுரை:
மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ஆகியோர் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பாக நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 232 க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் மற்றும் மதுரையின் தொன்மையினை பறைசாற்றும் வகையில் சிறப்பு புகைப்படங்கள் அடங்கிய மாமதுரை போற்றுதும் புகைப்பட கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டனர்.

மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டட பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மதுரை மாவட்டம், மாநகராட்சி வண்டியூர் சுந்தரம் பூங்காவில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அந்த வகையில், கண்மாயில் படகு சவாரி, சைக்கிளிங் பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை, யோகா மையம், தியான மையம், சிறிய நூலகம், சிற்றுண்டி, குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், பூங்கா ஆகியவை அமைகிறது.
மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 சௌராஷ்டிர மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.






