
பஞ்சமி சிறப்பு பூஜை :
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள், அர்ச்சணைகள் நடைபெற்றது.
இதையடுத்து, இக் கோயிலில் அமைந்துள்ள வராஹி அம்மன், துர்க்கை அம்மன், பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, வராஹி, துர்க்கை, பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.
கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதே போல மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், வைகை காலனி கிழக்கு பகுதியில் உள்ள சக்தி அம்மன் ஆலயத்தில் பட்டர் கோபாலகிருஷ்ணன், வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.






