
பழனி சண்முகபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது- ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி சண்முகபுரம் தமிழ் இலக்கிய மன்றம் வளாகத்தில் அமைந்துள்ளஅருள்மிகு சித்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பலிகள் நிறைவுற்றதை அடுத்து இன்று கோயிலில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு செலுத்தி குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு பால், பழங்கள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பழனி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.






