March 2, 2026
மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

மதுரை :

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,விளாச்சேரி ஆதிசிவன் நகரில் சர்குரு சுய உதவி குழுவினர் மானிய விலையில் வங்கி கடன் பெற்று மசாலா பொருட்கள் தயாரிக்கும் பணி செய்து வருவதை பார்வையிட்டார்.

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், அவர்களின் தயாரிப்புகளை டிஜிட்டல் தளங்கள் மூலம் சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் பெற்று மின்னணு முறையில் சந்தைப்படுத்தவும், அரசின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மசாலா தொகுப்பினை தயாரித்து வழங்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சூரக்குளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இயந்திரயமாக்களுக்கான துணைத் திட்டத்தின் கீழ் வாலநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் மானியத்தில் வழங்கப்பட்ட பவர் டில்லரின் பயன்பாடு மற்றும் விவசாயிகளுக்கு அவற்றால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *