
விருது பெற்ற ஆசிரியரின் இல்லத்திற்கு நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு :
திருநெல்வேலி மாவட்ட பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார ஆசிரியராக பணியாற்றி வருபவர் திரு.பொன்னுசாமி இவர் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 2025 பெற்றுள்ளார்.
இதனை அறிந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு அப்துல் வகாப் எம்எல்ஏ அவர்கள் ஆசிரியரின் இல்லத்திற்கு நேரடியாக சென்று பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது அவருடன் நெல்லை மாநகர கிழக்கு திமுக பொறுப்பாளர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்






