
பழனி நகராட்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் பொதுநல மனு ..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
மேலும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் விரட்டுவது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக சில நாட்களுக்கு முன் பழனியில் நான்கு வயது குழந்தையை தெரு நாய் கடித்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் பழனி நகராட்சியில் நகர மன்ற தலைவர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆர் கே டி வெங்கடசுப்பிரமணி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்டம் மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.






