March 2, 2026
கும்மிடிப்பூண்டி அருகே கோங்கல் கிராமத்தில் வட்டாட்சியரை முற்றுகை ஆர்ப்பாட்டம்…..

கும்மிடிப்பூண்டி அருகே கோங்கல் கிராமத்தில் வட்டாட்சியரை முற்றுகை ஆர்ப்பாட்டம்…..

கும்மிடிப்பூண்டி, செப். 10: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி கோங்கல் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலங்களில் மான், காட்டுப்பன்றி, பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகிறது.

இதை ஒட்டியே தமிழக அரசுக்கு சொந்தமான நீர்நிலை, வண்டி பாட்டை உள்ளிட்ட நிலங்கள் இருந்து வருகிறது.

இந்த நிலங்களில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஆக்கிரமித்து வீடுகட்டியும் கட்டிடங்கள் கட்டியும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கோங்கல் கிராமத்தை ஒட்டி வண்டி பாட்டை இடத்தை ஏழை எளிய மக்கள் வழங்குவதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் திடீரென வந்தனர்.

இதை அறிந்த கிராமப்புற ஆதிதிராவிட மக்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு மேற்கண்ட இடத்தில் பட்டா வழங்கவில்லை எனவும் இந்த இடத்தை எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரியிடம் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதிரிவேடு சப். இன்ஸ்பெக்டர் பாக்சர் வினோத் பொது மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர் பேச்சு வார்த்தையில் இந்த இடத்தை அளக்க கூடாது எனவும் அதற்கான நிறங்களை எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டுமென கூறினர்.

அதற்கு வட்டாட்சியர் சுரேஷ்குமார் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டு காலனி பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் காலம் காலமாக ஆதி திராவிட மக்கள் வசித்து வந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 17 குடியிருப்புகளை சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றினோம் அதற்கு மாற்றியிடம் வாழ்வதற்காக தமிழக அரசு சார்பாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம் என கூறினார் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்த நில அளவீடு பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து அதிகாரிகள் உடனே சென்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *