
`அமலாக்கத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு !
தமிழகத்தில் சுமார் 15 ஆண்டுகளாக கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவில் கராத்தே போட்டிகள் நடத்தி கோடி கணக்கில் ஊழல்கள் செய்து கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் ( TSKA ) என்ற கராத்தே சங்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார், செயலாளர் அல்தாப் அலாம் இருவரின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றேன்.
தமிழகத்தில் இருக்கும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பெற்றோர்கள் அனைவரையும் ஏமாற்றி,அப்பாவி குழந்தைகளிடம் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் சோதனை செய்து,கொள்ளை அடித்த பணத்தை மீட்டு எடுக்க வேண்டுமாய் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்.






