
அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இவாஞ்சலின் தலைமை தாங்கினார் வரவேற்புரையை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆற்றினார்
சிறப்பு விருந்தினர்களாக நெல்லை இந்தியன் கேஸ் உரிமையாளர் திரு சுப்பையா தாஸ், பள்ளி முன்னாள் ஆசிரியர் திரு. ராஜா,திரு. அபுபக்கர், ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் நெல்லை இந்தியன் கேஸ் அதிபர் திரு சுப்பையாதாஸ் அவர்கள் மாணவர்கள்டையே வினாடி வினா போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தார்
நன்றியுரை பட்டதாரி ஆசிரியர் திரு பக்கீர் மைதீன் ஆற்றினார் நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் தங்க ரூபி ரஹ்மத் நிஷா மாரியம்மாள் சிவகாமி உமா மகேஸ்வரி பாபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை இண்டேன் கேஸ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






