March 2, 2026
நிலக்கோட்டை ஒன்றியத்தில் 112 விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் மேளதாளம் முழங்க வானவேடிக்கையோடு பக்தி பரவசம்

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 112 விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் மேளதாளம் முழங்க வானவேடிக்கையோடு பக்தி பரவசம்

நிலக்கோட்டை, ஆக.29-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாம்பட்டி, நிலக்கோட்டை, சிலுக்குவார் பட்டி, கொடைரோடு ,அம்மைய நாயக்கனூர், அணைப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, தோப்புப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 112 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பாக அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக கிளம்பி நிலக்கோட்டை நாலுரோடுக்கு நேற்று இரவு 7 மணிக்கு வந்தடைந்தனர்.

அங்கு இந்து முன்னணி அமைப்பு மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சிலையாக அணிவகுத்து 112 சிலைகளும் முசுவனூத்து சிறுநாயக்கன்பட்டி அணைப்பட்டி வழியாக சென்று அணைப்பட்டி வைகை ஆற்றில் விசர்சனம் செய்யப்பட்டது.

வழிநெடுக ஏராளமான பக்தர்கள் என்று விநாயகர் சிலை ஊர்வலத்தை பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர். அதுமட்டுமல்ல எங்கு பார்த்தாலும் மான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிலக்கோட்டை பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நிலக்கோட்டையில் சுமார் ஒரு ஒரு மணி நேரம் ஒருவழிப்பாதையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *