
நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒட்டங்குளம் பகுதியில் புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம்- பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் 2026ல் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர வைப்போம் என சூளுரை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒட்டங்குளம் பகுதியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் படி, நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை பெருந்தலைவருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தலைமையில் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் “மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!” குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் 1ம் தேதி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைக் கழகங்களில் கடந்த அஇஅதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும் கிளைக் கழகச் செயலாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகளை ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி மீ.இ.ரவிச்சந்திரன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களுக்கு நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஆலோசனைகளை வழங்கிய நிலையில், வரும் 2026ல் தமிழக முதலமைச்சராக புரட்சித்தமிழர் எடப்பாடியாரை அரியணையில் அமர வைப்போம் என்றும் ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி மீ.இ.ரவிச்சந்திரன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வீரபாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் அங்குராசு, வீரசோழன் நகரக் கழகச் செயலாளர்கள் அப்துல் நாஸர், பரமேஸ்வரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஹோண்டாஜி என்ற இருளாண்டி மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கிளைக் கழகச் செயலாளர்கள், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியான பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






