March 2, 2026
ராமநாதபுரம் மாவட்டம் உடையத் தேவர் வகையறா 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் உடையத் தேவர் வகையறா 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கீழ வில்லானேந்தல் உடையத்தேவர் வகையறாவுக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவிலில் வரும் ஆவணி 11ஆம் தேதி (27-08-2025) புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு மாபெரும் பொது அன்னதானத்துடன் முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடையத்தேவர் வழியினரால் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 33வது ஆண்டாக விழா நடைபெறுவதால், கிராம மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர் வில்லானேந்தல் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தர விநாயகர், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கருணைமிகு விக்னேஸ்வரராகப் “சுந்தர” எனும் பெயரிலேயே அவரின் அழகு, ஆனந்தம், ஆசீர்வாதம் வெளிப்படுகிறது. அழகான வடிவில், சாந்தமான முகச்சாயலுடன் பக்தர்களின் மனதை கவரும் தன்மை கொண்டவர்.

ஊரின் காவல்தெய்வமாகவும், எல்லா விழாக்களுக்கும் முதல் பூஜை பெறும் பிரதான தெய்வமாகவும் வணங்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகுந்த சிறப்புடன் நடைபெறுகிறது. அப்போது அன்னதானம், பக்தி நிகழ்ச்சிகள், இசை-நடன கலைகள் இடம்பெறும். பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்கின்றனர். துவக்கம், கல்வி, திருமணம், தொழில் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் சுந்தர விநாயகரிடம் வழிபடுவது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

விழாவையொட்டி, காலை மணி முழக்கத்துடன் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற உள்ளன. பின் அன்று மாலை 4.00 மணி அளவில் வானவேடிக்கை, மேள தானத்துடன் முளைப்பாரி பவனி, ஊர்வலம், சென்று கங்கையில் கரைத்தல் நடைபெறுகிறது பக்தர்களின் ஊர்வலம், மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தெய்வ அருள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 10 மணி அளவில் வில்லானேந்தல் பாக்கியம் குழுவினர் நையாண்டி மேளம் மற்றும் உச்சிப்புளி சத்யா குழுவினரின் கரகாட்டமும் நடைபெற உள்ளது இந்த விழா, கிராம மக்களின் ஒற்றுமைக்கும், பக்தி உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. தலைமுறை தலைமுறையாக நடத்தப்பட்டு வரும் இந்த மரபு, இன்றளவும் அதே பக்தி பூர்வத்துடன் தொடர்கிறது.

விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் விநாயகர் அருளால் குடும்ப வளமும், நலமும், செழிப்பும் பெறுவார்கள் அனைவரும் வருக ஸ்ரீ சுந்தர விநாயகர் அருள் பெறுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *