
நீதிமன்றத்தில் கலங்கத்தை யார் துடைப்பது.?
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந் த் வர்மா அவர் வீட்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது.
ஒரு நீதிபதியின் வீட்டில் இவ்வளவு பணம் எப்படி வந்தது இவர் நீதிபதியா? எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் நீதிமன்றங்கள் விலை மாதர்களைப் போல் ஏன் செயல்படுகிறது. உச்ச நீதிமன்றம் இவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவரை எதற்காக அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
இந்தியாவில் நீதி காரி துப்பும் அளவுக்கு இருக்கிறது. ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டிய நீதிமன்றங்களில் ஊழல் இதைப்பற்றி கவலை கொள்வதாக உயர் நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றங்களும் வேடிக்கை பார்க்கிறது.
சம்பந்தமில்லாத பல வழக்குகளை மூக்கை நுழைக்கிறது நீதிமன்றம். விமர்சனத்திற்கு உள்ளான போது நீதி எங்கே எப்படி இருக்கும் நீதி அற்ற நாடு இந்தியா ஒவ்வொரு குடிமகனின் கடைசி அத்தியாயம் உச்சநீதிமன்றம் அந்த உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக நீதிபதிகள் பிரபல வக்கீல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதை தொழிலாக கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல உலகமே காரி துப்பும் அளவில் இந்திய நீதித்துறை கேடு கேட்டு போனது. நீதிபதிகள் அனைவரும் சம்பளம் வாங்கி கிம்பளம் வாங்கும் தொழில் ஆகிவிட்டது.
இதைப்பற்றி வக்கீல்களும் பொதுமக்களும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை ஆளும் பாஜக அரசு இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தண்டிக்கும் சட்டம் ஏன் நீதிபதிகளுக்கு இல்லாமல் போனது.
இங்கு நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இதற்குப் பெயர் நீதியா? வாய்மையே வெல்லும் ஒருபோதும் நீதிமன்றத்தில் வெல்லாது பொய்மையே வெல்லும். இது அனைவரும் அறிந்தது.
எதற்காக நீதிமன்றம் இவர்கள் சுகபோக வாழ்க்கைக்கு மக்களை நாசம் செய்யும் வேலையை நீதிமன்றங்கள் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து அரசியல் கொள்ளைக்காரர்கள் காலம் வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதை தடுக்க வேண்டிய தட்டிக் கேட்க வேண்டிய வழக்குரைஞர்களும் பொதுமக்களும் வேடிக்கை பார்ப்பது இந்தியாவில் இழிவான தேசம் என்று கருதும் நிலைக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டும் நீதித்துறை அரசியல் அரசாங்கம் அனைத்தும் தூய்மைப்படுத்த வேண்டும் சட்டம் மக்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும் மலருமா மீண்டும் ஒரு சுதந்திர இந்தியா?
ஆர்.முருகன் : சுதந்திர இந்தியா ஆசிரியர்






