March 2, 2026
101 ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாட்டம்

101 ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாட்டம்

ஸ்ரீபெரும்புதூர் : ஆகஸ்ட் : 15

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 101 ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமையில் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரிமளா, துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தண்டலம் நடுநிலைப்பள்ளி ஓய்வு ஆசிரியர் வரதையன், தண்டலம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவன் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் 2024-2025 ஆண்டில் 10,11,12 -வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாவது மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவித்தனர். மற்றும் ஆசிரியர்கள் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தண்டலம் நடுநிலைப்பள்ளி ஓய்வு ஆசிரியர் வரதையன் அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்கள் நாம் இந்திய அளவில் தேடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நசரத்பேட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்க முதலியார் சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர் என்பதும் இவரது மருமகன் தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் எஸ் ஏ எஸ் காதர் பாட்ஷா அவர்கள் பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் போது தான் கதர் ஆடை அணிந்து சென்றதாகவும் அதனை ஏற்றுக் கொள்ளாத தலைமை ஆசிரியர் காதர் பாட்ஷா அவர்களை பள்ளியை விட்டே நீக்கியதாகவும் கூறி நெகிழ வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *