March 4, 2026
நாரையூரணி கண்மாயை பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு.

நாரையூரணி கண்மாயை பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு.

கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக மனு.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நாரையூரணி கிராமத்தின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரமான அழகு வள்ளியம்மன் கோவில் கண்மாய், இந்த கம்மாய் நாரையூரணி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கன் ம்மாயாகும் பல ஆண்டுகளாக தனிநபர் ஒருசிலரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை மீட்க கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் அனைவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளனனர்.

இது குறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது

எங்கள் கிராம மக்களின் உயிர்நாடியான கண்மாய், பல தலைமுறைகளாக விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக ஒருசிலரால் ஆக்கிரமித்து, தனிப்பட்ட பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீர் சேமிப்பு திறன் குறைந்து, பாசன வசதி பாதிக்கப்பட்டு, எங்கள் விவசாயம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தால், அந்த நபர்கள் மிரட்டும் நிலை உருவாகியுள்ளது. இது கிராம மக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று அவர்கள் கூறினர்.

மேலும், அவர்கள் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி, கண்மாயின் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு நடைபெறாதவாறு எல்லைக் கற்களை நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

“உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்ட ரீதியான போராட்டத்துக்கும், மக்கள் இயக்கத்துக்கும் எங்கள் கிராம மக்கள் தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளனர் கிராம மக்கள் நலனையும் பொது சொத்துக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த”சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதனை உணர்த்தும் வகையில், இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *