
கனிமொழியை கண்டால் வர சொல்லுங்கள் இல்லை கையோடு கூட்டி வாருங்கள்.!
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.
மாநகராட்சி மேயர்.பிரியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு போன்றவர்கள் இந்த தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை. கொரோனா காலத்திலும் இயற்கை பேரிடர் காலத்திலும் இந்த தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு செய்த சேவை மறந்து போனது அரசு . தூய்மை பணியாளர்கள் அனைவரையும் ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் குப்பைகள் அல்லும் காண்ட்ராக்ட் கொடுத்து விட்டது.

இவர்கள் வாங்கும் சம்பளத்தில் ராம்கி நிறுவனம் கையில் கொடுத்து இவர்களை பரிதவிக்க விட்டது திமுக அரசு. தூய்மை பணியாளர்களில் பெண்கள் 80% சதவீதம் பேர், 20% ஆண்கள் இவர்கள் அனைவரும் ஒரு வாரமாக மலையில் நனைந்தபடி தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களை தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு அடக்கம் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒதுங்குவதற்கு கூட மாநகராட்சியில் இடம் கொடுக்கவில்லை இவர்களை மனிதர்களாக கூட மதிக்கவில்லை இந்த ஸ்டாலின் அரசு.
மேயர் பிரியா கடந்த அரசை குற்றச்சாட்டுகிறார் தகுதியற்ற ஒரு நபரை தாழ்த்தப்பட்டவர் என்ற போர்வையில் பதவியில் அமர்த்தி தன்னை தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு காட்டிக்கொள்கிறது.

தூய்மை பணியாளர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட மக்கள் தான் இது அனைவருக்கும் தெரியும் தெரிந்திருந்தும் திமுக அரசு ஈவு இறக்கமற்ற கொடுமை செயலை அவர்களுக்கு செய்து விட்டது.
அவர்கள் வாங்கும் சம்பளமோ இருபதாயிரம் தற்பொழுது ஒப்பந்த பணி முறையில் இவர்களை வேலை செய்ய வைத்து வயிற்றில் அடிக்கிறது. இப்படி ஒரு ஈனச் செயலை எந்த அரசுக்கும் செய்ய மனம் வராது.
திராவிட மாடல அரசு மட்டும்தான் இப்படி ஒரு கருணை உள்ளம் இருக்கிறது தூய்மை பணியாளர்கள் நிலைமையை அவர்கள் வாய்மொழி மூலமாக சொல்வதைப் பார்க்கும்போது மனித இனம் இவ்வளவு கேவலமானதாக இருப்பதை வேடிக்கை பார்ப்பது மனித இனத்தின் அழிவு நெருங்குகிறது என்பதை தான் காட்டுகிறது.

இவர்கள் படும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல உலகத்தில் இருக்கும் இந்திய திருநாட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இயற்கை உபாதை மாதம் மாதம் தான் வரும் இவர்களுக்கு இவர்கள் செய்யும் கடும் உழைப்பால் மாதம் இருமுறை இயற்கை உபாதை வருகிறது.
மறுபுறம் நோய் தொற்று. மத்தளத்திற்கு இருபுறம் அடி கிடைக்கும் அந்த நிலை போல் தூய்மை பணியாளர்களில் பெண் தொழிலாளர்களின் அவல நிலையை அவர்கள் வாயால் சொல்லுவதை கேட்கும் பொழுது ஒவ்வொரு பெண்ணும் விளக்கமாறும் செருப்பும் எடுத்து தான் இந்த ஈன அரசை அடிக்க வேண்டும்.
இயற்கை உவாதையில் தவிக்கும் பொழுது இவர்களுக்கு இவர்களுடன் வேலை செய்யும் ஆண்கள் விஸ்பர் போன்ற பொருள்களை வாங்கித் தான் கொடுக்க முடியும் வெட்ட வெளி வீதியில் அதை எப்படி இவர்கள் மாற்றுவார்கள் இவர்களின் துயரம் சொல்ல முடியாது அதனால் இவர்கள் கனிமொழி எம்பி இடம் தங்கள் உடல் உறுப்பை பாதிப்பை காட்டுகிறோம் கனிமொழியை வரச் சொல்லுங்கள் என்கிறார்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, எந்த அரசியல் கட்சியும் இவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை. ஊடகங்கள் மலம் திங்க சென்று விட்டார்கள்.
இவர்களுடைய போராட்டம் வெளியில் வராதபடி ஆளும் திமுக அரசு பார்த்துக் கொண்டது இவர்கள் 20 ஆண்டுக்கு மேலாக இப்பணியை செய்து வருகிறார்கள். இவர்களுடைய வயது அடிப்படையில் நினைத்துப் பாருங்கள் இனிமேல் இவர்கள் எங்கு சென்று வேலை செய்வார்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த மக்களுக்கு அரசு செய்யும் அராஜகத்தை தட்டிக் கேட்பதற்கு சட்டமும் முன் வரவில்லை காவல்துறையும் முன்வரவில்லை.
இவர்கள் போராட்டம் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி தருவதாக தேர்தல் வாக்குறுதியில் ஸ்டாலின் பலமுறை பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சியின் போது இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடியது திமுக அரசு தற்பொழுது இவர்கள் ஆட்சி செய்யும் போது இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை அதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை எங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை அரசே கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அரசோ ராம்கி என்ற தனியார் நிறுவனத்தில் கொடுத்து பெற வேண்டியதை பெற்று விட்டது ஆதலால் இவர்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதை தவிர திமுக அரசுக்கு எந்த பயமும் இல்லை யார் கேட்கப் போகிறார்கள் எதிர்க்கட்சியும் இல்லை.
பிஜேபி அரசோ திமுக உடன் கள்ள உறவு வைத்து திமுக அடிக்கும் கொல்லையில் கண்டும் காணாமல் அண்ணாமலை முதல் பிஜேபியில் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் வானதி சீனிவாசன் தற்பொழுது தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் இவர்கள் அனைவருமே திமுகவை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள்.
இவர்களுக்கு இந்து மக்கள் ஓட்டு வேண்டும் ஆதலால் மக்களை நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக கொள்ளையடித்து விட்டது என்று அண்ணாமலை தீபம் எறிவது போல் குதித்தார். இன்று அவர் எவ்வளவு கொள்ளையடித்தவர்களிடம் கொள்ளையடித்தார் என்பது அமித் ஷாவுக்கு தெரியும். பிஜேபியில் யாரும் உத்தமர்கள் கிடையாது பிஜேபி செய்யும் ஈன செயல் இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கசாப்பு கடைக்காரரிடம் சிக்கிய ஆடு மாடு போல் ஒரு நாள் நம்மை கோவிலுக்கு நேர்ந்து முடித்து விடுவார்கள். நானும் பிஜேபியை நம்பியவன் தான் இப்பொழுது திமுக விற்கும் பிஜேபிக்கும் மிக நெருக்கமே உள்ளது.
2026 யார் வெற்றி பெற்றாலும் நாசமாக போவது நாடும் நாட்டு மக்களும் தான் இவர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் பாருங்கள் இவர்களுக்குள் எவ்வளவு கள்ள உறவு இருக்கும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அளிக்கும் வாக்குச்சீட்டு உங்களுக்கு வாய்க்கரிசி தான் போடும் மக்களை காப்பாற்ற வேண்டிய சட்டத்துறையில் காவல்துறையும், ஆளும் திமுக விடவும் பிஜேபியிடம் சூ காலில் அடியில் இருக்கிறது.
இதை மீட்பதற்கு மக்கள் பொங்கி எழ வேண்டும் இது நடக்குமா என்பது கேள்விக்குறி தான். தேர்தல் கண்டிப்பாக வரும் மீண்டும் வாக்களித்து நம்மை நாமே அழித்துக் கொள்வதை காட்டிலும் இவர்களை வெள்ளையனை எதிர்த்ததை விட இந்த கொள்ளையர்களை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல எதிரியை ஜெயிக்கலாம் துரோகியே ஜெயிக்க முடியாது.
இந்திய அரசியல் தேசத் துரோகிகளின் கையில் சிக்கி உள்ளது. அன்று விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொடிகாத்த குமரன், வாஞ்சிநாதன், செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற மகான்கள் தேசப்பற்று உள்ளவர்கள் இன்று கிடையாது.
மக்களும் ஆயிரம் இரண்டாயிரத்திற்கு வாக்களிக்கும் நிலையில் இந்தியாவை யார் காப்பாற்றுவது தமிழகத்தை யார் காப்பாற்று கருணாநிதியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு எழுதி வைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு இந்தியா எழுதி வைக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு என்னால் உதவ முடிந்தது இந்த செய்தி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் உங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். மக்களே பொங்கி எழுவீர்களா?
சுதந்திர இந்தியா காலை நாளிதழ் வெப்சைட் ஆசிரியர் ஆர்.முருகன் எனது முகவரி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியான் கோட்டை கிராமம் ஆர்எஸ் மங்கலம் வழி என்னை மிரட்டுவதாக இருந்தாலும் வாழ்த்துவதாக இருந்தாலும் தொடர்பு எண் : 97 91 22 18 93/9442613788
வந்தே மாதரம் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் கண்டிப்பாக இந்தியாவில் உருவாகும் மாணவர் மாணவிகள் இளைஞர்கள் சமுதாயப் பற்று உள்ளவர்கள் அனைவரும் பதிவை இழிவாக எண்ணி விடாதீர்கள். மக்கள் எழுச்சி கண்டிப்பாக உருவாகும் இறைவனும் இயற்கையும் சூழலை உருவாக்குவார்கள்.
வாழ்க பாரத மாதா வந்தே மாதரம்… வந்தே மாதரம்… ஜெய்ஹிந்த்… ஜெய் ஹிந்த்…






