
பணி நிறைவு பாராட்டு விழா
மதுரை.
மதுரை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரமாராணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
காவல் ஆய்வாளராக 29 ஆண்டு பணிபுரிந்து ரமாராணி கடந்த மாதம் ஜூலை.31 ம் தேதியன்று ஓய்வு பெற்றார். அவரது பணியினை பாராட்டி, காவல் துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நினைவு பரிசுகள் வழங்கினர்.