August 7, 2025
கல்லாவி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

கல்லாவி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லாவி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவல் குழு தலைவருமான ரஜினி செல்வம், வட்டாட்சியர் மோகன் தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தனி வட்டாட்சியர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமில் மருத்துவ முகாம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அரங்கு, இ-சேவை மையம், ஆதார் மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான அரங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் இன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இம்முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. மேலும், இம்மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு விண்ணப்பம் அளித்த அன்றே உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்படட்டது. வேலாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், பப்பாளி, எலுமிச்சை, கொய்யா மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி குப்புராஜ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் குமார், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் கணேஷ், ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் நடராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவண்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனி, ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜவகர், கல்லாவி சமூக சேவை அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்லாவி ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *