March 2, 2026
சோழவந்தானில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சோழவந்தானில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சோழவந்தான்,ஜூலை:30:

மதுரை மாவட்டம், சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கு, லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுனர் பாரி பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.முன்னாள் ஆளுனர் செல்லப்பாண்டியன், ஆளுனர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகி சரவணன் வரவேற்றார்.

ஒருங்கிணைப் பாளர்கள் பிரேமா செல்லப் பாண்டியன், ஸ்டாலின் ஆரோக்கியராஜ்,மண்டல தலைவர் தேவி காமாட்சி, வட்டார தலைவர் பாஸ்கரன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதன் பின்னர், சோழவந்தான் லயன்ஸ் சங்கத் தலைவராக மகேந்திரன், செயலாளராக ரா. தனராஜ், பொருளாளராக கருப்புசாமி ஆகியோர் பதவியேற்றனர்.இதன் பின்னர் ஏழைகளுக்கு அரிசி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் , ஆண்டு முழுவதும் மாணவ, மாணவிகள்,ஏழை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என, புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதில் , முன்னாள் தலைவர்கள் டாக்டர் மருது பாண்டியன், இளஞ்செழியன், மூத்த நிர்வாகிகள் பரிசுத்த ராஜன், குமரேசன், அண்ணா முருகன், சுரேஷ் பாண்டியன், முத்துலிங்கம்,ஜவஹர்,காந்தன், குணசேகரன், பிச்சை மணி,ராஜதினகரன்,சிவபாலன், தங்கராஜ், அருள்ராஜ்,நடேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *