
திண்டுக்கல்லில் மாநில அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஐக்கிய விளையாட்டு பேரவையின் சார்பில் திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள தர்ஷா மஹாலில் மது போதை ஒழிப்பு பெண்களை பாதுகாப்போம் மற்றும் கல்வி விதைப்போம் என்ற தலைப்பில் மாநில அளவிலான கேரம் போட்டி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகமது அவர்கள் ஒருங்கிணைப்பில் அணியின் மாவட்ட செயலாளர் ரிஸ்வான் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப் போட்டியினை ஐக்கிய விளையாட்டுப் பேரவை மாநில செயலாளர் அப்துல் ரவூப் அவர்கள் தொடங்கி வைத்தார் மாவட்ட தலைவர் நைனா முகமது மாவட்ட பொருளாளர் நத்தம் சேட் மாநகர தலைவர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் மருத்துவ சேவை அணி செயலாளர் மாஸ்டர் சேக் பரித் வரவேற்புரை ஆற்றினார்.

போட்டியில் சென்னை கோவை திருச்சி திண்டுக்கல் திருப்பூர் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 64 அணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் இறுதியாக முதல் பரிசு வென்ற கோவை செல்வகணேஷ் அணியினருக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பையுடன் சான்றிதழையும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களும் இரண்டாம் பரிசை வென்ற சென்னை எஸ் எஸ் பிரியாணி அணியினருக்கு மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சார்பாக திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் பிலால் உசேன் அவர்களும் மூன்றாவது பரிசினை வென்ற அணியினருக்கு ரூபாய் 5000 மற்றும் கோப்பை உடன் சான்றிதழ்களை நகர் தெற்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் அவர்களும் நான்காம் பரிசு வென்ற அணியினருக்கு அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் அரபு முகமது அவர்களும் இணைந்து ரூபாய் 2500 மற்றும் கோப்பையுடன் சான்றிதழ்களையும் சிறந்த வீரர்களுக்கான பரிசினை மாநில செயலாளர் அப்துல் ஹாலிக் அவர்களும் வழங்கினார்கள். போட்டியில் சிறந்த நடுவராக செயல்பட்ட ஆதம் பாட்ஷா அவர்களுக்கு சிறந்த நடுவர்கான கேடயமும் வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் பாட்ஷா பாய்,சத்தார் பாய்,சம்சுதீன், மார்க்கெட் தாஹா, முஸ்தபா,அப்துர் ரஹ்மான் ,ராஜா முகமது வழங்கினார்கள். போட்டி ஏற்பாடுகளை சிறப்பாக வளையல் இப்ராஹிம், முஹம்மது இப்ராஹிம், முகமது சித்திக் ஆகியோர் தலைமையிலான கமிட்டி உறுப்பினர்கள் மார்க்கெட் ஷேக், சர்தார்,காசிம், கனவா ,ஒலி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தார்கள் இறுதியாக மாநகர செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் நன்றி உரையாற்றினார்.