
மார்க்கம்பட்டி மாம்பாறை முனியப்பன் கோவிலில்உலக நலன் வேண்டி ஒட்டன்சத்திரம் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் சாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்கம் தலைவர் தலைமையில் ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி மாம்பாறை முனியப்பன் கோவிலில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தயும் உலக நலன் வேண்டியும் கிடாவெட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இவ் வழிபாட்டில் அண்ணா ஓட்டுநர் உரிமையாளர் நல சங்கத்தின் செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் சந்தாதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.