
அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள்
வாடிப்பட்டி, ஜூலை.17-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்டு ராஜா தலைமை தாங்கினார்.
பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் அங்காள ஈஸ்வரி முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் ரம்யா வரவேற்றார். இந்த விழாவில், காமராசர் உருவப்படத் திற்கு உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
இதில், மாணவர்களு க்கு கவிதை கட்டுரை பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் சுரேஷ் செந்தில் முருகன் கேத்தரின் அனிதா ரெஜிஸ் ராணி உள்பட கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் ஜெயபிரபா நன்றி கூறினார்.