March 2, 2026
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் முன்பு 30 லட்சம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்ட பணி துவக்கம்

அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் முன்பு 30 லட்சம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்ட பணி துவக்கம்

நிலக்கோட்டை, ஜூலை.3-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீர ஆஞ்சநேயர் கோயிலுக்கும ஆஞ்சநேயரை தரிசிக்கவும்,வைகை ஆற்று படுகை செல்வதால் அவ்வப்போது தண்ணீர் செல்லும் காரணத்தால் குளிப்பதற்கும் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும் அம்மாவாசை, மற்றும் மாங்கல்ய நாள் காலங்களில் மிகவும் சிறப்பான நாளாக ஆஞ்சநேயர் தரிசித்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்ல ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை விரதம் இருந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்வதால் இப்பகுதியில் குளிக்கும் போது திறந்த வெளியாக இருப்பதால் உடை மாற்றுதல் மற்றும் பல்வேறு தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்பட்டு வந்தது.

அதுமட்டுமல்ல அப்பகுதியில் கழிப்பறை கட்டிடங்கள் இல்லை எனவே உடனடியாக மகளியர்களுக்கான தனி சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்று சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இதனை ஏற்று தற்போது திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் விதமாக மகளிர் சுகாதார வளாகம் கட்ட நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் மூலமும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமும் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கி மகளிர்களுக்கான சுகாதார வளாகம் கட்ட உத்தரவிட்டார். அதற்கான பூமி பூஜை போட்டு பணி துவக்க நிகழ்ச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மாவதி, பஞ்சவர்ணம், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் டெல்லி பாபு, திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அழகர்சாமி, முன்னாள் கவுன்சிலர் அறிவு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை, மணிமேகலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீபா சின்னபாண்டி, ஊராட்சி செயலாளர்கள் சின்னச்சாமி, விஜயகர்ணபாண்டி, கார்த்தி, திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் லட்சுமணன், கர்ணன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாக சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சுகாதார வளாகம் கட்டும் பணியை துவங்கியதை பொதுமக்களும் பக்தர்களும் அப்பகுதி உள்ள வணிகர்களும் வரவேற்பளித்து மகிழ்ச்சியடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *