March 2, 2026
அதாவது... நடந்தது என்னானு இதுவரை வந்த செய்திகள் & தகவல்களை வச்சி ஆர்டரா சொல்றேன்...

அதாவது... நடந்தது என்னானு இதுவரை வந்த செய்திகள் & தகவல்களை வச்சி ஆர்டரா சொல்றேன்...

அதாவது திருபுவனம் கோவில்ல சிறப்பு தரிசனம் செய்ற வசதி இருக்கு. அது போக நடக்க முடியாத முதியவர்களுக்கு வீல்சேர் வசதியோட தள்ளிட்டு போயி தரிசனம் பாக்குற வசதியும் இருக்கு…
.
அப்புடி வர கூடிய ஆட்கள் கிட்ட காவலுக்கு இருக்குறவங்க நான் தள்ளிட்டு போறேன்னு சொல்லி அதுக்கு ஒரு தொகையா 100 200 முதல் 500வரை வாங்குறாங்க…
.
இது லஞ்சம் தான்…
.
இதே மாதிரி தான் அன்றைய தினம் அந்த பெண்மனி தன்னோட தாயை கூட்டிகிட்டு போயிருகாங்க..
.
வீல்சேர்ல தள்ளிட்டு போயி தரிசனம் செய்ய 500 ரூவாய் கேட்டு இருக்கார் அஜீத்குமார்…
.
இது இலவசம் தானே..? எதுக்கு பணம் கேக்குறீங்கன்னு அந்த பெண் வாதாட.. 500 ரூவாலாம் தர முடியாதுனு 2 பேருக்கும் வாக்குவாதம் ஆகிருக்கு…
.
இது அங்க கோவிலுக்கு வந்தவங்க எல்லாரும் பாத்திருகாங்க..
.
அந்த பெண்மணி விசயத்தை அந்த கோவிலோட அதிகாரிகிட்ட சொல்ல, அஜீத்தை அந்த அதிகாரி திட்டி இருக்கார்…
.
தன்னை திட்டு வாங்க வைத்த அந்த நபரை அஜீத் திட்டிருகார்…
.
என்கிட்டயே இப்புடி பேசுறியா..? உன்னை சும்மா விட மாட்டேன்டான்னு அந்த பெண்மகி பேசிட்டு போன வரைக்கும் ஊருக்கே தெரியுமாம்…
.
இந்த சின்ன வாக்குவாதத்தை அப்புடியே விட முடியாத அந்த பெண்மனி.. தன்னோட அதிகார பலத்த காட்ட நினச்சிருக்கார்…
.
அதன் பெயர்ல தன்னோட உறவினரான தலைமை செயலகத்துல இருக்குற ஒரு IAS அதிகாரிக்கு போன் பண்ணி என்னோட நகைய ஒருத்தன் திருடிட்டான். கேட்டா குடுக்க மாட்றான்னு சொல்லிருகாங்க…
.
(அண்ணா பல்கலை “சார்” மாதிரி இந்த IAS அதிகாரியும் யாருனு இது வரை தெரியல…)
.
இங்க ஒரு வார்டு கவுன்சிலரோட புருசனே எத்தனை அராஜகம், கட்ட பஞ்சாயத்து பன்றாங்கனு நமக்கு தெரியும்…
.
இதுல தலைமை செயலக IAS அதிகாரியோட உறவினர்னா அவங்களுக்கு எவ்வளவு Ego திமிர், அதிகார திமிர் இருக்கும்..? அதான் டிரிகர் பாய்ன்ட்…
.
தலைமை செயலகம் எத்தனை பவர் புல்லான இடம்னு பல பேருக்கு தெரிஞ்சிருக்கும்…
.
தெரியாதவங்களுக்குகாக சொல்றேன்..
.
முதல்வரே ஒரு கையெழுத்து போட்டாலும் அதை சட்டம் ஆக்குறது தலைமை செயலகம் தான்…
.
அத்தனை அதிகாரம் படைத்த ஒரு இடத்துக்கு எல்லா அரசு அதிகாரிகளும் கட்டுபடுவாங்க…
.
அப்புடி இருக்குற நிலமையில தான் அங்க இருந்து ஒரு SPக்கு போன் போயிருக்கு…
.
அவர் மூலமா ஒரு DSPக்கு போன் போயிருக்கு..
.
அவர் மூலமா ஒரு தனிபடை மப்டி போலீஸார் அந்த இடத்துக்கு போயிருகாங்க…
.
அவங்களுக்கு குடுத்த ஒரே டார்கெட் நகைய அவன் திருடிருகான். அவன வெளுத்து நகைய வாங்கிட்டு வாங்க என்பது மட்டுமே…
.
முதல்ல அஜீத்த புடிச்சி விசாரிச்சி வெளுத்துருகாங்க…
.
அவன் வலி தாங்க முடியாமல் கோவில் பின் கூடத்துல இருக்குறதா சொல்ல, அங்க கூட்டி போயிருகாங்க…
.
அங்க வச்சி கேட்டப்ப வலி தாங்காம சொல்லிட்டேன். உண்மைலயே நான் திருடலனு கதறிருகான்…
.
அப்பவும் அவன விடாம பக்கத்துல இருந்த பைப், இரும்பு கம்பியால தாக்கிருகாங்க…
.
அஜீத் கதறுன சத்தத்தை ஊரே கேட்டு இருக்கு…
.
இந்த தாக்குதல்ல மயக்கமான அஜீத்த தனியார் மருத்துவமனையில சேத்துருகாங்க..
.
அங்க சோதிச்சதுல அவர் ஏற்கனவே இறந்துட்டதா சொல்ல மதுரை அரசு மருத்துவமனைக்கு உடல அனுப்பிட்டு எஸ்கேப் ஆகிருகாங்க…
.
இது எதுவுமே திருபுவனம் போலீஸாருக்கு தெரியாது. தனிபடை வந்து இதை செஞ்சி உடல் வந்த அப்புறம் தான் திருபுவனம் போலீஸ்க்கு விசயமே போவுது..
.
இப்ப வரைக்கும் நகைய காணோம்னு எந்த FIRரும் போடப்படல… அஜீத்த சந்தேகத்துல கூட்டி போனதுக்கு எந்த உரிய ஆதாரமோ, ஆவனமோ இல்ல…
.
ஒரு பெண்னோட கோவம் எத்தனையோ போர்கள உருவாக்குனதா வரலாறுல கேள்வி பட்டுருபோம்…
.
இப்ப ஒரு அரசே நடுங்குற அளவிலான சம்பவத்த செஞ்சிருக்கு…
.
500 ரூவா கேட்டது தப்பு தான். அதை குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்…
.
இல்ல கோவிலுக்கு வந்துருகோம்.. சாமிய கும்பிட்டு போவோம்னு போயிருக்கலாம்…
.
இல்ல அதிகாரி கிட்ட சொல்லியாச்சி அடுத்து நம்ம வேலைய பாப்போம்னு அடுத்த வேலைய பாக்க நகர்ந்து இருக்கலாம்…
.
ஆனா.. தன்னோட அதிகார மனப்பான்மை & சிறுமையான புத்தி அதை செய்ய விடல…
.
இல்லாத நகைய கார்ல வச்சதாகவும்.. அதை அஜீத் திருடினதாகவும் கேட்டா குடுக்கலனும் தலைமை செயலகத்துல தன்னோட உறவினர் வரைக்கும் இதை வேற மாதிரி கொண்டு போயிருகார்…
.
இது வரைக்கும் என்ன நகை.. எப்புடி இருக்கும்..? அதை எங்கே எப்போ அஜீத் திருடினார்..? இல்ல அஜீத் தான் திருடினார்னு CCTVஆதாரமோ.. இல்ல கைரேகை ஆதாரமோ இல்ல…
.
இதுவரைக்கும் நகையும் மீட்க படல…
.
இதுல சாமிய தரிசிக்க இலவசமா இருக்குற வீல்சேர தள்ளிட்டு போக 500ரூவா கேட்ட அஜீத் மேல தப்பா..?
.
இல்ல என்கிட்டயே நீ இப்புடி பேசுறியா.?? உன்னை என்ன பன்றேன் பாருனு.. இல்லாத நகைய திருடிட்டான்னு பொய்யா சொன்ன பெண்மனி மேல தப்பா..?
.
அதை உண்மையானு தெரியாம அதுக்கு உத்தரவு போட்ட தலைமை செயலக IAS தப்பா..??
.
அவரோட பேச்ச கேட்டு DSPய நியமிச்ச SP தப்பா..?
.
இல்ல SP யோட பேச்ச கேட்டு தனிபடை போலீசார அனுப்புன DSP யோட தப்பா..??
.
இல்ல உயர் அதிகார உத்தரவுனு சொல்லி உண்மை எதுன்னு கூட விசாரிகாம திருடன்ங்கிற ஒரே பார்வைல அவரை கொடூரமாக அடித்துக் கொன்ற அந்த கடைநிலை போலீசாரோட தப்பா..??
.
அதிகார போதை, நான் தான்ங்கிற ஆகம்பாவம் கொண்டவர்கள் உள்ளவரை, இவரை போல இன்னும் பல அப்பாவி அஜீத்குமார்கள் பலியாகத்தான் செய்வார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *