
கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.
கந்தர்வகோட்டை ஜீலை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் சங்கம் இளைஞர் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் நிதியமுதம் 460,சர்னி இரண்டாம் 456, அஜனா மூன்றாம் இடம் 438 பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை வந்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேவி, பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் ரெங்கசாமி உள்ளிட்டோ முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.
முன்னதாக பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராசம்மாள் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிறைவாக ஆங்கில ஆசிரியர் நன்றி கூறினார்.