
புதுச்சேரி உப்பளம் தொகுதி வேதவள்ளி நகர் ஆலயத்தின் புனரமைப்பு பணிக்கான நிதி உதவி.
புதுச்சேரி ஜூலை 2
புதுச்சேரி, உப்பளம் தொகுதி வேதவள்ளி நகர் முஸ்லிம் கல்லறை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதவள்ளி மாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்புத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக அனிபால் கென்னடி எம்எல்ஏ., முயற்சியால் உறுதியான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆலயத்தின் பழுதடைந்த நிலையை எடுத்துரைத்து, கட்டுமான பணிக்கான நிதி உதவியை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி அவர்களிடம் கோரினர். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆலயம், உரிய பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய , அடுத்த நாளே ஆலயத்திற்கு சென்று ரூ.50,000 நன்கொடை வழங்கினார். இது பொதுமக்களில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நேதாஜி நகர் 2 பகுதிக்கு உட்பட்ட முஸ்லிம் கல்லறை வீதியில் உள்ள இந்த ஆலயத்துக்கான கட்டுமான நிதிக்காக, இந்து அறநிலையத்துறையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டுமெனும் கோரிக்கையுடன் பொதுமக்கள் அனிபால் கென்னடியை மீண்டும் அணுகினர்.
அவரும் இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பின்னர் அதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறை ஆணையரை நேரில் சந்தித்து பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். இதன் தொடர்ச்சியாக, அறநிலையத்துறை வழியாக மொத்தமாக ரூ.3,50,000 மானிய தொகையில் முதல் தவணையாக ரூ.1,75,000 பெற்றுத் தரப்பட்டது. மீதமுள்ள இரண்டாவது தவணையையும் பெற பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரை இன்று (ஜூலை 1, 2025) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் மேற்பார்வையாளர் தயாபுரியை சந்தித்து, கோயில் பஞ்சாயத்து தலைவர், கழகச் சகோதரர்கள் மற்றும் ஊர் தலைவர்கள் உடன் வர இரண்டாவது தவணை பெற நடவடிக்கை எடுத்தார். சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று, ஆணையர் விரைந்து மீதமுள்ள ரூ.1,75,000 காசோலை வழங்குவதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் கிளைச் செயலாளர் ராஜசேகர், ஊர் தலைவர்கள் ரங்கநாதன் மற்றும் செந்தாமரை ஆகியோரும் உடனிருந்தனர்.








