
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு கொட்டப்பட்ட குப்பை.
மதுரை.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் அர்ச்சனைக்காக வாங்கிச் செல்லும் பூஜை பொருட்கள் முறையாக அகற்றப்படாமல் கோவிலில் இருந்து ஸ்ரீ மண்டபம் வழியாக வெளியே வரும் வாயிலில் ஆசைப்பட்டது வாங்கி செல்லும் பூஜை பொருள்கள் பிரிக்காமல் புதிதாக கொட்டி குவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குப்பைகளை முறையாக அகற்றாமல் கோவில் முன்பு குவிலாக கிடப்பது பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், ஆந்திர மாநில துணை முதல்வர் சாமி தரிசனம் செய்யவிருக்கும் நிலையில் கோவில் முன்பு குப்பை குவியலாக கட்டப்பட்டிருப்பது பேசிப் பொருளாகியுள்ளது.