March 2, 2026
பழனியில் மீன் வளர்ச்சி கழக அதிகாரிகளைக் கண்டித்து உறுப்பினர்கள் சார்பாக புகார் மனு அளித்தனர்...

பழனியில் மீன் வளர்ச்சி கழக அதிகாரிகளைக் கண்டித்து உறுப்பினர்கள் சார்பாக புகார் மனு அளித்தனர்...

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுக்கா கூட்டுறவு சங்கம் சார்பாக நகர் மற்றும் தாலுகா பகுதிகளில் உள்ள 39 குளங்களை நிர்வகித்து வருகின்றனர்.

தொடர்ந்து சங்கத்தில் 2500 உறுப்பினர்கள் அடையாள அட்டை பெற்று இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சங்க உறுப்பினர்களுக்கு எளிய குத்தகை அடிப்படையில் மீன்பிடிப்பதற்கு குளங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து இச்சங்கத்தின் தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் நிலையில் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் குளங்களில் உள்ள அமலை செடியால் மீன்கள் இறக்கும் நிலை காணப்பட்டு வருவதால் சங்கத்தின் மூலம் அமலச்செடியை குளங்களில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் சங்கத்தின் மூலம் எந்த ஒரு குளத்தையும் தூர்வாரப்படவில்லை மற்றும் பழனி தாலுகா மீனவர் சங்க அதிகாரி சங்க உறுப்பினர்களுக்கு குளங்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து சங்க உறுப்பினர்களை புறக்கணிக்கும் வகையில் மாற்று நபர்களுக்கு மீன் பிடிப்பதற்கு உரிமம் வழங்கப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டி பழனி தாலுகா மீனவர் சங்கம் சார்பாக கோட்டாட்சியர் கண்னண் மற்றும் வட்டாட்சியர் பிரசன்னா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்களான நாச்சிமுத்து, மாரிமுத்து, மதுரை வீரன், மாசாணம், ஐயப்பன், மணிகண்டன், கச்சை கட்டியான், முருகன், சரவணபாண்டியன், இராமர், கந்தசாமி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மணிவினை அளித்தனர்.

மேலும் மீன் வளர்ச்சித்துறை அதிகாரி அனைத்து உறுப்பினர்களையும் கட்சி பாகுபாடின்றி சமமாக பாவிக்க வேண்டும் அனைவருக்கும் சமமான முறையில் குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அடையாள அட்டையை திருப்பிக் கொடுக்கும் போராட்டம் மற்றும் தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *