
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிகூட்டம்
ஸ்ரீபெரும்புதூர்: ஜூன் 16
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கூட்டத்தில் பட்டு நூல் சக்கரம், 101ஜமீன் தண்டலம், ஆயக்குளத்தூர், கிளாய், திருமங்கலம், மாத்தூர், கீர நல்லூர், கூத்தவாக்கம் ,ஆகிய 8 அரசு பள்ளிகளைச் சார்ந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், மாநில கருத்தாளர்கள் சந்தியா, கண்ணன், ஆகியோர் பயிற்சி அளித்திட, காஞ்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி அவர்கள் சிறப்புரை ஆற்றினார், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் முருகன், சுப்புலட்சுமி ,வட்டார மேற்பார்வையாளர் பாரதிராஜா, வட்டார ஆசிரியர் பயிற்றுனர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.