April 17, 2026
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி..

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி..

கந்தர்வக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணிதப் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசித்தார்.

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்து பேசும்பொழுது உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய்,ஜெம்ம ராகினி சகாய கில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *