April 17, 2026
சாதிக்கு ஒரு நீதி ? ஆளும் கட்சிக்கு ஒரு நீதி ? தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் அவர்களே பதில் கூறுங்கள் ?

சாதிக்கு ஒரு நீதி ? ஆளும் கட்சிக்கு ஒரு நீதி ? தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் அவர்களே பதில் கூறுங்கள் ?

தஞ்சை மாநகரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கேட்டால் அனுமதி இல்லை

அனுமதி கேட்டதற்கு பதிலாக தஞ்சை மாநகர் முழுவதும் வாகன நெருக்கடியும் சாலை நெருக்கடியும் உள்ளது அதனால் அனுமதியை தர வாய்ப்பு இல்லை என பதில் தந்த மாநகராட்சியும் தஞ்சை மாவட்ட நிர்வாகமும்

எப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர்
மு.கருணாநிதி அவர்களின் திருஉருவச் சிலை வைப்பதற்கு அனுமதி தந்தது

இப்பொழுது மட்டும் சாலையில் நெருக்கடி ஏற்படாதா? அல்லது வாகன நெரிசல் ஏற்படாதா? ஏற்கனவே தஞ்சை அண்ணா சிலை அருகே வாகன நெரிசலால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தினந்தோறும் அல்லல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த இடத்தினை எப்படி மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தினரால் சிலை வைக்க அனுமதி தரப்பட்டது

இந்த சிலையினை வைப்பதற்காக ஏதேனும் சிறப்பாக மாவட்ட நிர்வாகத்தினாலா அனுமதி அளிக்கப்பட்டு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதா?

தஞ்சை மாநகராட்சி மாமன்ற அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் ஏதேனும் கூட்டங்கள் போடப்பட்டு அந்தக் கூட்டங்களின் வாயிலாக தீர்மானம் போடப்பட்டு உள்ளதா அல்லது ஆளுங்கட்சியின் அடாவடியால் தன்னிச்சையாக வைக்கப்படுகிறதா என்கின்ற கேள்வியும் உள்ளது

உடனடியாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வைக்க தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் மதுரை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் எங்களுக்கு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலை வைப்பதில் எந்தவித நெருடலும் கிடையாது

ஆனால் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக இருக்கின்ற வாழ்ந்து கொண்டிருக்கின்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒரு குறிப்பிட்ட சாதி தலைவராக நினைத்து சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை என்று கடிதம் கொடுத்துவிட்டு இப்பொழுது மட்டும் சிலை வைக்க அனுமதி அளிப்பது எப்படி சரியான நிகழ்வாகும்

ஆகையால் உடனடியாக தஞ்சை மாவட்ட நிர்வாகமும் ,மாநகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும், புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு இடம் உடனடியாக ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்பதை புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இல்லையென்றால் சட்டத்திற்கு புறம்பாக ஒரு சாரருக்கு துணையாக சிலை வைக்க முயல்கின்ற செயலை கண்டித்து தடுத்திடும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவரின் சிலையை தஞ்சை மாநகரில் மத்தியில் வைத்திடும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை வழக்கு தொடரப்படும் தஞ்சை மாவட்ட மற்றும் மாநகர அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் இந்த முகநூல் வாயிலாக இணையதள செய்திகள் வாயிலாகவும் சமூக ஊடக மூலமாகவும் தெரிவித்து கொள்கிறோம்

இணைப்பு :

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை தஞ்சை மாநகர் பகுதியில் வைப்பதற்கு அனுமதிகோரி தரப்பட்ட கடிதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு பதில் தரப்பட்ட கடிதம் நகல் ந க எண்3969/2015 /எப்1.,நாள் 09/04/2015

இவன்
ஆதி. இல. அறிவுடை நம்பி மாநிலத் துணைச் செயலாளர் மாவட்ட செயலாளர் தஞ்சை புரட்சி பாரதம் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *