March 2, 2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பெரியகுளம் கிளை நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பெரியகுளம் கிளை நிர்வாகிகள் தேர்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டம் வடகரை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய தலைவராக மோகன், செயலாளராக ராஜா, பொருளாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து பெரியகுளம் பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

இதில் பகுத்தறிவாளர் கழக பெரியகுளம் நகர நிர்வாகிகள் இப்ராஹிம் பாஷா, முத்துவேல் பாண்டியராஜன் (எ) கண்ணன், மின்சார வாரிய பொருளாளர் (ஓய்வு) முருகன் மற்றும் மாநில மண்டல நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *