
பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பாக பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் பழனி வர்மக்கலை வைத்தியர் தர்மராஜ், தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருந்ததாவது :
தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய குரு வழியில் சித்த மருத்துவம் செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2000 திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பாரம்பரிய வைத்தியத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபகாலமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு பயந்து சித்த மருத்துவர்கள் பெயர் பலகைகளை நீக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சித்த மருத்துவர்களாகிய நாங்கள் பல கொடிய நோய்களுக்கு சிறிய செலவில் மக்களுக்கு வைத்தியம் செய்து வருகின்றோம் பிற மருத்துவ வழிகளை கையால்வது இல்லை நாங்கள் டாக்டர் என்ற பெயரை பயன்படுத்துவதும் இல்லை எங்கள் வாழ்விற்கு வழிகாட்டி அழிந்து வரும் பாரம்பரிய மருத்துவத்தை காத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை அளித்துள்ளனர்.
அது மட்டும் இன்றி அந்தந்த மாவட்டங்கள் தாலுகா வாரியாக தாசில்தார்கள் மூலம் கணக்கெடுத்து அதன் மூலம் சித்த மருத்துவர்களுக்கு முறையான சான்றளித்து சித்த மருத்துவர்களாகிய எங்களையும் எங்கள் குடும்பங்களையும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என பாரம்பரிய சித்தமருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.






