
கல்பட்டு மதுரா நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு மதுரா நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மகாகும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மங்கள இசை, அனுக்கை, சங்கல்பம், கணபதிபூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக தீப ஆராதனை, இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், மூலிகை ஹோமங்கள் பூஜைகள் நாடி சந்தானம் வருண பூஜை,வாஸ்து சாந்தி முதலிய சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாக வேள்வி, கோ பூஜை புண்யவாகனம், மூலிகை ஹோமங்கள் மகாபூர்ணாதி, மகா தீபாரதனை கடம் புறப்பாடு ஆலய வலம் வருதல் முதலிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. காலை 10.15 முதல் 10:30 மணிக்குள் மிகவும் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

விழாவினைக்கான சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அ.குமாரசுவாமி கவுண்டர் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
